ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் ஒன்றாக இணைந்திருப்பது பாதகமானது: எஸ்.பி. திஸாநாயக்க

252
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த நாளும் ஒன்றாக இணைந்திருப்பது பாதகமான சூழ்நிலையையே உருவாக்கும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டி மாரஸ்ஸன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இரண்டு அரசியல் கட்சிகளும் எப்போதும் இணைந்திருப்பது நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும்.

ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில நோக்கங்களின் அடிப்படையில் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.

SB-Dissanayake-720x480

இந்த இரண்டு கட்சிகளும் எந்த நாளும் ஒன்றாக இருக்க முடியாது.

இந்த இரண்டு கட்சிகளும் இரண்டு பக்கங்களில் இருப்பதே ஜனநாயகத்திற்கு நல்லது. அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று வழியாக இனவாத கடும்போக்குவாத தரப்புக்கள் எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கலாம், நாட்டுக்கு வலுவான ஓர் எதிர்க்கட்சி அவசியமாகின்றது.

புதிய அரசியல் அமைப்பை அமைத்தல், ஜெனீவா பிரச்சினைக்கு தீர்வு காணல் போன்ற காரணிகளுக்காக நாம் இணைந்து செயற்படுகின்றோம்.

நாட்டுக்கு வலுவான ஓர் அரசாங்கத்தை அமைக்க கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

SHARE