ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் நேற்று (21) முதலமைச்சரின் இல்லத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளான லயோறி வைஸ்பேர்க், மிறாக் றகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, வட மாகாணத்தின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கொள்கை வகுப்பு, காணிகள் விடுவிப்பு மற்றும் இந்தியாவிலிருந்து மீள திரும்பும் அகதிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை, இக் குழுவினர் நேற்று முன் தினம் (20) வட மாகாண மீள் குடியேற்ற அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை சந்தித்து, இவை தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.