இலங்கை தொடர்பாக தான் வெளிப்படுத்திய தீவிரத்தை பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் என்ற போர்வையில் சித்திரவதைகள் வன்முறைகள் போற்றவற்றில் ஈடுபடும் முக்கிய நாடுகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தவேண்டும் என பாக்கிஸ்தான் கோரியுள்ளது.
ஜெனீவாவிற்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஜமீர் அக்ரம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாத மற்றும் பிரிவனைவாத சக்திகளை எதிர்கொள்வதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சிகளிற்கு பாக்கிஸ்தான் என்றும் ஆதரவாக செயற்பட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டு மக்களிற்கு சர்வதேசசமூகத்தின் ஆதரவு தேவை என பாக்கிஸ்தான் கருதுகின்றது.
இலங்கை தொடர்பாக தான் வெளிப்படுத்திய தீவிரத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் உலகின் முக்கிய நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்ற போர்வையில் இழைக்கும் வன்முறைகள் குறித்தும் காண்பிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.