ஆகஸ்ட் 15 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சுதந்தர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் நடத்த உள்ளார். அவருடைய இசைப் பயணத்தில் இது ஒரு பொன்னான தருணமாகும். ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.