ஐ.நா செல்லும் மைத்திரிக்கு காத்திருக்கும் எதிர்ப்புகள்

132

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவருக்கு எதிர்ப்பை காட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.

இந்த நிலையில் அன்றைய தினம் பிற்பகல் 12 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

போரின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமை காரணமாக 70,000 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பாக இருந்தார் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சுமத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE