ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டி

286
ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கி மூன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிகிறது. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டியிடுகிறார்.

ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கீ மூன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிகிறது. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதற்காக இதுவரை 7 பேர் போட்டியிட மனு செய்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள் ஆவார்.

தற்போது இப்போட்டியில் நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க்கும் இணைந்துள்ளார். நடைபெற உள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று அறிவித்தார்.

இது குறித்து பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் தேவை. அதில் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக அங்கம் வகிக்க வேண்டும். 21–ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த 2 நாடுகள் நிரந்தர உறுப்பினராகும் என்றார்.

இவருக்கு நியூசிலாந்து பிரதமர் ஜான் கே ஆதரவு தெரிவித்துள்ளார். அதை வெல்லிங்டனில் நடந்த போட்டியின் போது வெளியிட்டார். ஹெலன் கிளார்க் 30 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவர்.

தற்போது ஐ.நா. வளர்ச்சி திட்ட குழுவின் தலைவராக பணிபுரிகிறார். ஐ.நா. பொதுச்செயலாளராக இதுவரை 9 பேர் பதவி வகித்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்களே.

பெண்கள் யாரும் இதுவரை அப்பதவி வகிக்கவில்லை. தேர்தலில் வென்றால் இதன் மூலம் ஐ.நா. சபையின் முதல் பொதுச்செயலாளர் என்ற பெருமையை ஹெலன் கிளார்க் பெறுவார்.

இப்பதவிக்கு இவரை தவிர யுனெஸ்கோ தலைவர் இரினா போசோவா (பல்கேரியா), அகதிகளுக்கான உயர்மட்ட குழு முன்னாள் கமிஷனர் அன்டோனியோ கட்டர்ஸ் (போர்ச்சுக்கல்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

SHARE