ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தற்காலிக அறிக்கை .

228

பொறுப்புக் கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான தற்காலிக அறிக்கையை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளது. காணாமற்போனவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு விஷேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் போது காணாமற்போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கவுள்ளதாக கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெற்றது. இதன்போது மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை விஜயம் தொடர்பில் அவரது நீண்ட உரையில் தெரிவித்திருந்தார்.

இந்த அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டு, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய தேசிய பொறிமுறையின் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்பகட்ட நகர்வுகள் குறித்தும் தெளிவூட்டப்பட்டிருந்தன.

srilanka-special_session

SHARE