
இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி20 போட்டித் தொடரில் சன்ரைஸஸ் ஹைட்ராபாட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் றோயல் சலன்ஜர்ஸ் பங்களுரு அணியை எட்டு ஓட்டங்களினால் வீழ்த்தி சன்ரைஸஸ் வெற்றியீட்டியுள்ளது.
பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய சன்ரைஸஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய சன்ரைஸஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் டேவிட் வார்னர் 69 ஓட்டங்களையும், கட்டிங் 39 ஒட்டங்களையும் யுவராஜ் சிங் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் றோயல் சலன்ஜர்ஸ் அணியின் சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் சலன்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை மட்டுமே பெற்றக்கொண்டது.
இதில் கிறிஸ் கெயல் 76 ஓட்டங்களையும், விரட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பென் கட்டிங் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
முதல் தடவையாக சன்ரைஸஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக பென் கட்டிங்கும் தொடரின் பெறுமதிமிக்க வீரராக விராட் கொஹ்லியும் தெரிவு செய்யப்பட்டனர்.