
பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஜம்பா 6 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
ஐதராபாத் அணியில் ஷிகர் தவான் 33(27), வில்லியம்ஸன் 32(37), யுவராஜ் சிங் 23(21) ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 138 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் புனே அணி விளையாடியது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த அஜய் ரகானே இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினார். கவாஜாவும் 11 ரன்களில் ரன் அவுட் ஆனார். 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து புனே அணி தடுமாறியது.
இதனையடுத்து பெய்லியுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை ஒன்று இரண்டாக சேர்த்தனர். 12-வது ஓவர் முடிவில் 68 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. பெய்லி 34(40) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 29(25) ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். திவாரியும் 9 ரன்களில் ஆட்டமிழக்க தோனியும், பெரேராவும் கடையில் போராடினார்.
பரபரப்பான ஆட்டத்தில் இறுதி ஒவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பெரேரா ஒரு ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பெரேரா கேட்சாகி ஆட்டமிழ்ந்தார். இதனால் கடைசி 3 பந்தில் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
4-வது பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி பந்தில் ஜம்பா கேட்சாகி அவுட் ஆனார். இதனால் ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் நெக்ரா அதிக பட்சமாக 3 விக்கெட்டுகளை விழ்த்தினார். 7 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
6 விக்கெட்டுக்களை வீழ்த்திய புனே அணியின் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை பெங்களூரில் நடைபெறும் 41-வது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.