இதில் மூன்றுபேர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதோடு நான்கு பேர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதனைக் கண்டித்து ஒட்டுசுட்டான் வர்த்தகசங்கம் கடையடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வாள்வெட்டுக்கு இலக்கான மூவரும் முல்லைத்தீவு மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியமுடிகிறது.
நேற்று முன்தினம் இரவு சிவராத்திரி தினத்தில் ஓட்டுசுட்டன் வர்த்தக நிலையத்தில் இனந்தெரியாத குழு கோயிலுக்கு முன்னர் இருந்த கடையில் மதுபோதையில் வந்து புகைப் பிடிப்பதற்காக கோர்லிப் மற்றும் டயலொக் காட் கேட்டு தகராறு புரிந்துள்ளனர். பின்னர் கடைமுதலாளியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்றயதினம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினர் குறித்த கடையில் வாள் மற்றும் பொல்லுகளுடன் இறங்கி கடையில் நின்றவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கடை முதலாளி உள்ளிட்ட மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதோடு நான்கு பேர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது குறித்த கடைமுதலாளியின் மோட்டார் சைக்கிள் மீதும் வாளினால் வெட்டியதோடு அருகிலிருந்த இளைஞர்கள் வந்து பிடிக்கமுற்பட்போது குறித்த குழுவினர் அவர்களையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்தச் செயற்ப்பாட்டை கண்டித்து ஒட்டுசுட்டானில் கடைகள் புட்டப்பட்டு ஆர்ப்பாட்டமொன்றை நிகழ்த்த ஏற்பாடாகினர்.
கடைஉரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்தில் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடினர்.
பொலிசார் இவ்வாறான சம்பவங்கள் நடக்கவிடாது தாம் அவதானிப்பதாகவும் இந்த நடவடிக்கைக்காக தாம் உரிய சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கடைகளை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்காது விடில் தாம் வீதியிலிறங்கி போராடுவோம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.