முத்துராமலிங்கம் என்ற பெயரில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஒரு படம் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர்ராஜதுரை இயக்கிவரும் இப்படத்திற்கு இளையராஜாஇசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்போடு நின்றிருக்கிறதாம். ஏனென்றால் முதல்கட்டப் படப்பிடிப்பின்போதே படப்பிடிப்புக் குழுவினருக்கு உரிய வசதிகளைத் தயாரிப்புத்தரப்பு செய்து தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கட்டணம் உட்பட எதுவும் தயாரிப்புத் தரப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் படக்குழுவினர் தவிக்க, தகவல் அறிந்த பிரியா ஆனந்த், சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து படக்குழுவினரை மீட்டாராம்.