ஒன்ராறியோவில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்!

214

கனடாவின் ஒன்ராறியோவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த மாகாண பொலிசாரின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ மாகாண பொலிசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஜூலை 11 ஆம் திகதி வரையான காலகட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 6 எண்ணிக்கை மட்டுமே குறைவு.

இதே நிலை நீடிக்கும் என்றால் 2016 ஆம் ஆண்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 164 இருசக்கரவாகன ஓட்டிகளும் அவர்களுடன் பயணம் செய்தவர்களும் உயிரிழந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு 21 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறும் அந்த அறிக்கை, தொடர்ந்துள்ள ஆண்டு 27 எனவும், அடுத்த ஆண்டு 28 எனவும் கூறுகின்றது.

2014 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 32 என அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 31 என பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டில் இதுவரை 25 பேர் எனவும் கூறுகின்றது.

பெரும்பாலான விபத்துகள் சாலை சந்திப்புகளை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முயல்வதால்தான் ஏற்படுகிறது என ஒன்ராறியோ பொலிசார் தெரிவிக்கின்றனர்.

திறமையான வாகன ஓட்டுனார இருந்தால் கூட சாலை சந்திப்புகளில் அவர்களின் கவனம் சிதறுவதாக தெரிவிக்கிறார் ஒன்ராறியோ பொலிஸ் அதிகாரி டேவ் ரெக்டர்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பாய்ந்து வந்த இருசக்கரவாகனம் மோதியதில் ஓட்டிவந்த நபரும் அவருடன் பயணம் செய்தவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE