பிரபல சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக் என்பன அறிமுகம் செய்யப்பட முன்னர் உருவாக்கப்பட்ட இணையத்தளமே StumbleUpon ஆகும்.
புதிய இணையத்தளங்களை தேடித்தரும் சேவையினை இத் தளம் பயனர்களுக்கு வழங்கி வந்தது.
2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த இவ் இணையத்தளமானது சுமார் 16 அரை வருடங்களுக்கு பின்னர் தற்போது மூடப்படவுள்ளது.
மாற்று இணையத்தளம் ஒன்றினை அறிமுகம் செய்யும் நோக்கிலேயே இத் தளம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி mix.com எனும் புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
StumbleUpon இணையத்தளமானது இதுவரை 40 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களால் 60 பில்லியன் தடவைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது.