ஒபாமாவை கொல்ல தபாலில் வந்த சயனைடு…

380
images (7)

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ரகசிய துறை பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது வெள்ளை மாளிகை ரகசிய துறை செய்தி தொடர்பாளர் பிரையன் லியரி கூறுகையில், மார்ச் 16ம் தேதி வெள்ளை மாளிகைக்கு தபாலில் வந்த கவரை முதல் கட்டமாக பயலாஜிக்கல் சோதனை செய்த போது அதில் ஆபத்தான் பொருள் ஏதும் இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் அதில் இருந்த பாக்கெட் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மார்ச் 17ம் தேதி மீண்டும் கெமிக்கல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அதில் சயனைடு இருப்பது தெரிய வந்தது என தெரிவித்துள்ளார்.
1995ம் ஆண்டு இதே போன்று வெள்ளை மாளிகைக்கு மனிதகழிவுகளை பாக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டது. விசாரணையில் மனித கழிவுகளை அனுப்பியவரின் அதே முகவரியில் இருந்து தான் தற்போது சயனைடும் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதே நபர் கடந்த பல ஆண்டுகளாக பலதரப்பட்ட பாக்கெட்களை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வருவதாகவும், 2012ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி காலி மதுபான பாட்டில்களை அந்த நபர் அனுப்பியதாகவும் வெள்ளை மாளிகை இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE