ஒருகொடவத்த – கடுவல நீர் விநியோக குழாய் கட்டமைப்பை மீளப் புதுப்பிக்க நடவடிக்கை

222

ஒருகொடவத்த – கடுவல நீர் விநியோக குழாய் கட்டமைப்பை மீளப் புதுப்பிக்கும் கருத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒருகொடவத்த – கடுவல குழாய் நீர் கட்டமைப்பை மீளமைக்கும் கருத்திட்டம் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் ஆலோசனை வழங்கியதையடுத்து துரிதப்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தின் மூலம் 245,000 இணைப்புகள் ஊடாக 15 இலட்சம் நீர் பாவனையாளர்கள் நன்மையடைந்துவதுடன், இக்குழாய் கட்டமைப்பு மீளமைக்கப்பட்ட பின்னர் மேலும் பல தசாப்த காலங்களுக்கு இதன்மூலம் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், அம்பத்தலை முதல் ஒருகொடவத்த வரையான குழாய் பதிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்கள்களை விரைவாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE