வவுனியாவில் அபீன் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ அபீன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்,வல்வெட்டித் துறை பகுதியைச் சேர்ந்த ஒருவரே வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளர்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து போதைப் பொருளை பெற்றுக்கொள்ளும் பாணியில் பொலிஸார் அவருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரமே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அபீன் சுமார் ஒருகோடி ரூபாய் பெறுமதியுடையவை எனவும் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.