ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கை பிறிதொரு நாட்டின் தேவைக்கு அமைய வகுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்…
நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் பிணைந்திருக்க வேண்டும்.
எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் புதிய தூதுவராலயங்களை அமைத்து உலகின் பல நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக்கொண்டோம்.
அதேபோன்று நாம் மரபு ரீதியான நட்பு நாடுகளுடனும் சுமூகமான உறவுகளைப் பேணி வந்தோம்.
எமது நாட்டின் மக்களது நலனுக்காக வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறுகின்றார். இந்த இரண்டில் எது உண்மை என்பதனை தெரிந்துகொள்ள விரும்புகின்றோம்.
நாடு என்ற ரீதியில் சீனா போன்ற நாடுகளுடன் சிறந்த உறவினைப் பேண வேண்டும்.
தேர்தல்காலத்தில் போர்ட் சிட்டி திட்டம் விமர்சனம் செய்யப்பட்டது. எனினும் தற்போது அவை நல்ல திட்டங்களாக மாற்றமடைந்துள்ளன என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்