ஒருநாள் கிரிக்கெட்டில் 498 ஓட்டங்கள்..துவம்சம் செய்த பட்லர்! வரலாற்றை புரட்டிப்போட்ட இங்கிலாந்து

131

 

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 498 ஓட்டங்கள் குவித்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

ஆம்ஸ்டீல்வீனில் இன்று தொடங்கி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 1 ஓட்டத்தில் அவுட் ஆனார். அதன்பின்னர் பிலிப் சால்ட் – மாலன் ஜோடி நெதர்லாந்தை புரட்டி எடுத்தது.

இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 222 ஓட்டங்கள் குவித்தது. சால்ட் 93 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அதிரடி மன்னன் பட்லர், ஐபிஎல் போட்டி என்று நினைத்து விளையாடியது போல் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 47 பந்துகளில் சதம் விளாசினார்.

அதன் பின்னர் 45வது ஓவரில் 125 ஓட்டங்கள் எடுத்திருந்த மாலன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் 51 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்கோரை குவித்த அணி என்ற சாதனை படைத்தது இங்கிலாந்து. இதற்கு முன்பும் இந்த சாதனை இங்கிலாந்து அணி தக்க வைத்திருந்தது. 2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 481 ஓட்டங்கள் இங்கிலாந்து எடுத்தது.

ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 162 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 14 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்தார்.

SHARE