ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் அதிகளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார். ராஸ் டெய்லர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
முதல் பத்து இடங்களுக்கான பட்டியலில் இன்னொரு இந்திய வீரரான ஷிகர் தவான் இடம்பிடித்துள்ளார். இவர் எட்டாவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஜஸ்பிரிதி பும்ரா முதலிடத்திலும், குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சஹால் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
சிறந்த அணிகள் பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்தும், இரண்டாமிடத்தில் இந்தியாவும் உள்ளது.