ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச

375

 

எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங்குவது என்பதும் இரண்டு வெவ்வேறு காரணிகளாகும்.  ஒருவரை ஓருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் வரலாற்றுக் காலம் முதல் இலங்கையில் இந்த கலாச்சாரம் காணப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

3448762883_81857d6e36 MahindaPoster_CI

கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது.

இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு.

மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது.

நான் எனது பொறுப்புக்களை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது நான் செய்த பணிகளை முன்னெடுப்பார்கள் எனக் கருதியே வீட்டுக்கு சென்றேன்.

நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிய காரணத்தினால் மக்கள் என்னை நேசிக்கின்றார்கள்.

நாம் அனைவரும் பௌத்த மத வழிமுறைகளை பின்பற்றினால் பௌத்த மதம் எம்மை பாதுகாக்கும்.

பௌத்த மத கொள்கைகளின் அடிப்படையில் நாம் பயங்கரவாதிகள் மீது குரோதம் கொள்ளாது அவர்களுக்கு கருணை காட்டி, புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைத்தோம்.

தொலைக்காட்சியில் அல்லது இணையத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படும் எல்லாவற்றையும் நம்பிவிட வேண்டாம்.

யார் எதனையாவது சொன்னால் அதனை ஆராய்ந்து பார்க்காது ஏற்றுக்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல கொட்டலுகொடகந்த ஸ்ரீ கௌல்தராம விஹாரையின் ஸ்ரீ சுமன அறநெறிப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE