பிரபல நடிகையான அசின், ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்.
தற்போது இவர்களது திருமணம் வருகிற 20ம் தேதி டெல்லியில் உள்ளபிரபல ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. 2 நாள் விழாவாக நடக்கும் இவர்களது திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்து, கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறதாம். திருமணத்தை தொடர்ந்து மும்பையில் வருகிற 23ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறுகின்றது.