அனைத்து பிரச்சினைகளுக்கு ஒரு இரவில் தீர்வுகாண முடியாது எனவும் அரசாங்கம் எந்த பிரச்சினையையும் ஒதுக்கிவிட்டு செல்லாது எனவும் பிரதியமச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
அம்பாறை தெய்யத்தகண்டிய பிரதேசத்தில் நேற்று சதோச அங்காடியை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் இருக்கும் எந்த பிரச்சினையையும் தற்போதைய அரசாங்கம் கைவிட்டு செல்லாது. அதேபோல் பிரச்சினைகளை ஒரே இரவில் தீர்க்கவும் முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
20 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாத எதிர்பார்ப்புகள் கட்சியினருக்கு உள்ளது. பல வருடங்களாக ஆட்சியாளர்கள் திரும்பிக் கூட பார்க்காத பிரச்சினைகள் மக்களுக்கு உள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு. ஜனாதிபதியும் பிரதமரும் இதற்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.