ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் போட்டா போட்டி!

286

625.167.560.350.160.300.053.800.300.160.90

தமிழகத்தில் ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாசின்(30). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணமான ரேணுகா என்ற பெண்ணுடன் பாசினுக்கு தொடர்பு ஏற்பட்டு இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இதற்கிடையே இரண்டு பெண்களும் பாசின் தனக்கு தான் சொந்தம் எனக்கூறி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

ஜாஸ்மின் கரூர் மகளிர் காவல் நிலையத்திலும், ரேணுகா கரூர் எஸ்.பி-யிடமும் புகார் அளித்துள்ளனர்.

இரு தரப்பினரையும் மகளிர் காவல் நிலையத்தில் அழைத்து பேசுகையில், சமரசம் ஏற்படாததால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

பின்னர் இருதரப்பினரையும் விலக்கி விசாரணை நடத்தியதில் எவ்வித பலனும் இல்லாததால் அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர், இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE