களுத்துறை மாவட்டம் அட்டுலுகமவைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் நஷ்ரீனைத் (35) தேடி ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணைகள் மற்றும் தேடுதல் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற தங்க ஏலம் ஒன்றிற்காக சென்றிருந்த குறித்த வர்த்தகருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாயிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியியிருந்த நஷ்ரீனிடம் ஒரு கோடி ரூபா பணம் இருந்ததாகவும், அவர் மற்றும் சிலருடன் அங்கிருந்து ஏலத்திற்காக சென்றதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் காணாமல் போன வர்த்தகர் தொடர்பில் இதுவரை 23 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.