பாகுபலி படம் பிரபாஸை ஒரு இன்டர்நேஷனல் ஸ்டார் ஆகிவிட்டது. மெகாஹிட் ஆன அந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக துபாயில் நடந்துவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட சேஸ் காட்சியை படக்குழு எடுத்துள்ளனர். ஒரு ரேஸ் பைக்குடன் பிரபாஸ் இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது இந்த சண்டைகாட்சிக்கு 90 கோடி ருபாய் செலவளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பலருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.
பல முன்னணி ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் சாஹோ படத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.