ஒரு திட்டத்தை கைவிட்ட பேஸ்புக் மற்றொரு திட்டத்தை கையில் எடுக்கின்றது

280

ட்ரோன் ரக விமானங்கள் மூலம் உலகின் மூலை முடுக்கெங்கும் இணைய இணைப்பினை வழங்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் ஏற்கணவே திட்டமிட்டிருந்தது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் ட்ரோன் விமானங்கள் வடிவமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறன நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் குறித்த திட்டத்தினை கைவிடவுள்ளதாக அதிரடியாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு திட்டத்தினை கையில் எடுத்துள்ளது.

அதாவது பேஸ்புக் நிறுவனம் சொந்தமாக செயற்கைக் கோள் ஒன்றினை விண்ணிற்கு அனுப்பவுள்ளதுடன், அதனைப் பயன்படுத்தி உலகளவில் இணைய இணைப்பினையும் வழங்க முன்வந்துள்ளது.

இதன் ஊடாக அனைத்து பிரதேசங்களுக்கு இணைய இணைப்பு கிடைக்கச் செய்ய முடியுமென்பதுடன், வேகம் கூடிய இணைப்பையும் வழங்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

SHARE