ஒரு தொகுதி விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு – எம்.ஏ.சுமந்திரன்:

328

ஒரு தொகுதி தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு விரைவில் புனர்வாழ்வு அளிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பத்து நாட்களுக்குள் முதல் தொகுதி சந்கேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.


சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இது குறித்து நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 85 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்கு உட்பட விரும்புவதாக எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

SHARE