நிபுணன் படம் மூலம் பரவலாக அடையாளம் காணப்பட்டவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். கன்னட சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். A booty artwork ஆங்கில படம் மூலம் சினிமாவிற்கு வந்த இவர் தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தற்போது கலாத்மிகா என்ற பெயரில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தெஸ்லா என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். வினோத் ராஜ் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதி 7 வேடங்களில் நடிக்கிறாராம்.
இதன் லுக் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அறிவியல் சார்ந்த கதையில் பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படுகிறதாம். கன்னடத்தில் மட்டுமே எடுக்கப்படும் இப்படம் புதுமையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.