ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம்- கமல்ஹாசன் இரங்கல்

89

‘எதிர்நீச்சல்’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

maalaimalar

SHARE