ஒரு நாயகன் 4 முன்னணி நாயகிகள்

256

அதர்வா படமொன்றில் 4 முன்னணி நாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்…

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் அதர்வாவும் ஒருவர். இவர் சமீபத்தில் நடித்த ‘சண்டிவீரன்’, ‘ஈட்டி’, ‘கணிதன்’ ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் அமைந்தது. இதனால் இனிமேல், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘செம போத ஆகாதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘செம போத ஆகாதா’ படத்தை அதர்வாவே தயாரித்து வருகிறார். மற்றொரு படமான ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக 4 முன்னணி நாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்களாம். மேலும், இப்படத்தில் சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஓடம் இளவரசு இப்படத்தை இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்து வருகிறார்.four-famous

SHARE