ஒரு நாளைக்கு 7 பாக்கெட் பிஸ்கட்… இதை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழும் இளம்பெண்

568

ஒரு நாளைக்கு 7 பிஸ்கட் பாக்கெட்டுகளை மட்டுமே சாப்பிட்டு கர்நாடகா இளம்பெண் உயிர்வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் ராமாவா. இதுநாள் வரை பார்லே ஜி பிஸ்கட்டை தவிர வேறு எந்த ஒரு சாப்பாட்டையுமே இவர் சாப்பிட்டதே இல்லையாம்.

குழந்தையில் பிஸ்கட்… குழந்தையாக இருந்தபோது ராமாவாவுக்கு அவரது தாயார் பார்லேஜி பிஸ்கட் வாங்கித் தந்துள்ளார்.

அதை பாலில் தொட்டு சாப்பிட்டு பழகினார் ராமாவா. நோ சாப்பாடு ஆனால் இது அவர் வளர்ந்த பின்னரும் தொடர் கதையாகிவிட்டது…

எந்த ஒரு சாப்பாட்டையுமே அவர் சாப்பிடுவதில்லையாம்.. ஒரு நாளைக்கு 6 அல்லது 7 பார்லேஜி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தால் போதுமாம்…

பெற்றோர் தத்தளிப்பு இப்போது ராமாவாவுக்கு வயது 18 ஆகிவிட்டது…அவரது இந்த பழக்கத்தை மாற்ற முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். திருமணம் கேள்விக்குறி இனியும் இந்த பழக்கத்தை மாற்றாமல் விட்டுவிட்டால் அவரது திருமண வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர்.

அதே நேரத்தில் தாங்கள் ஏழை விவசாயிகள் என்பதால் ராமாவாவுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் மேற்கொள்ளவும் முடியாமல் தவிக்கிறோம் என்கின்றனர் பெற்றோர்.girl

girl01

girl02

SHARE