ஒரு பஞ்ச் விட்டா தலை திரும்பிடும் – ஜெயம்ரவியை பார்த்து சொன்ன எடிட்டர்

286

ஜெயம் ரவியின் பூலோகம் படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.

இப்படத்தில் பாக்சராக ஜெயம் ரவியுடன் அமெரிக்க நடிகர் நாதன் ஜோன்ஸ் நடித்திருக்கிறார். நாதன் ஜோன்ஸ் என்றதும் பயந்துவிட்டாராம் ஜெயம் ரவியின் தந்தை.

இதுபற்றி மோகன் கூறுகையில், நாதன் ஜோன்ஸ் நடித்திருக்கும் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவரை படப்பிடிப்பில் நேரே பார்த்தேன், என் உயரத்துக்கு இருந்தார்.

அவர் நிஜத்திலும் பாக்சர் என்பதால் எனக்கு பயமாகிவிட்டது.

ஜெயம்ரவியிடம் ஒவ்வொரு நாளும், ஜாக்கிரதை, உன்னுடன் நடிப்பவர் நிஜ பாக்சர். ஒரு பஞ்ச் விட்டா போதும் தலை திரும்பிடும், பாத்துக்கோடா பாத்துக்கோடா என்று தினமும் சொல்லி அனுப்புவேன் என்றார்.

SHARE