ஒரு பதக்கமும் இல்லையே…ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தொடரும் தடுமாற்றம்

268

ரியோ ஒலிம்பிக்ஸில் இன்னும் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், தடகளத்திலும் இந்திய அணியின் தடுமாற்றம் தொடர்கிறது. ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் வழக்கம் போல இந்தியா தடுமாற்றத்துடன் தான் தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான வட்டு எறிதலில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் இந்திய வீரர் விகாஸ் கவுடா. தற்போது ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட விகாஸ் கவுடா மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், 35 பேர் கலந்து கொண்ட இந்த தகுதி சுற்றில் விகாஸ் கவுடா 58.99 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 28-வது இடமே பிடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார்.

SHARE