ஒரு மீனை ரூ.9 கோடிக்கு வாங்கிய கோடீஸ்வரர்

214

ஜப்பான் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஏலம் ஒன்றில் ஒரே ஒரு மீனை ரூ.9 கோடிக்கு வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த Kiyoshi Kimura என்பவர் Kiyomura Corporation நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

மீன்கள் மீது அதிகளவு பிரியம் வைத்துள்ள இவர் உலகில் உள்ள பெரும்பாலான மீன் வகைகளையும் இவர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மீன்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

பல்வேறு வகை மீன்கள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் கோடீஸ்வரரும் பங்கேற்றுள்ளார்.

மேலும், மிகவும் அரிதாக கடலில் கிடைக்கும் Bluefin tuna வகை மீன் ஒன்றும் இந்த ஏலத்தில் இடம்பெற்றது.

இந்த மீனை வாங்குவதற்கு பெரும் போட்டி நிலவியது. இம்மீனின் இறைச்சி ஒரு கிலோ சுமார் 20 டொலர்(2,966 இலங்கை ரூபாய்) ஆகும்.

ஆனால், இந்த ஏலத்தில் ஒரு கிலோ சுமார் 6,000 டொலர் வரை மதிப்பிடப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

விலையைக் கண்டு பின்வாங்காத அந்த கோடீஸ்வரர் முழு மீனையும் 6,32,000 டொலருக்கு(9,37,44,560 இலங்கை ரூபாய்) வாங்கி சாதனை படைத்துள்ளார்.

மீன் விற்பனை குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் பேசியபோது, ‘இவ்வகை மீன்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கும். இதுமட்டுமில்லாமல் இம்மீன்கள் தற்போது அழிந்துக்கொண்டு வருவதால் இவற்றை வாங்க கடும் போட்டி நிலவி வருவதாக’ அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டு மேற்கு கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் இம்மீன் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE