விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 தொடங்கிவிட்டது. முதல் நாளே படத்தின் ஓப்பனிங் பாடலை பிரமாண்டமாக எடுத்து முடித்தனர்.
இப்படம் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் தளபதி-62வில் வசனம் எழுதுவது எழுத்தாளர் ஜெயமோகன் தான் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்திற்காக இவரை ஒரு வருடத்திற்கு முன்பே அனுகினார்களாம், அவரும் உடனே சம்மதித்துவிட்டாராம்.
மேலும், படத்தின் வசனங்கள் எல்லாம் எழுதி முடித்துவிட்டாராம், தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.