ஒரு வாரத்திற்கு மின்வெட்டு

362

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், நாளை 23ஆம் திகதி புன்னக்குடா, மிச்நகர், மீராகேணி, மக்காமடி, தைக்கா வீதி மற்றும் ஐpன்னா வீதி ஆகிய பகுதிகளிலும், 24ஆம் திகதி கொக்கட்டிச்சோலை மற்றும் அரசடித்தீவு ஆகிய பகுதிகளிலும், 26ஆம் திகதி உப்போடை, பயனியர் வீதி, அரசடி, கூழாவடி, ஞானசூரியம் சதுக்கம், இருதயபுரம் கிழக்கு – மேற்கு, கொக்குவில், சத்துருக்கொண்டான் மற்றும் திருமலை வீதி ஆகிய பகுதிகளிலும், 27ஆம் திகதி கடுக்காமுனை – L 06 இலும், 28ஆம் திகதி கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் மற்றும் பூநொச்சிமுனை ஆகிய பகுதிகளிலும், 29ஆம் திகதி கோராவெளி – T 053விலும், 30ஆம் திகதி புன்னக்குடா, மிச்நகர், மீராகேணி, மக்காமடி, தைக்கா வீதி மற்றும் ஐpன்னா வீதி ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE