ஒரே இன்னிங்சில் 193 ரன்கள்! ருத்ர தாண்டவம் ஆடிய படிக்கல்

125

 

ரஞ்சிக்கோப்பை போட்டியில் கர்நாடக அணியில் விளையாடி வரும் தேவ்தட் படிக்கல் அதிரடியாக 193 ஓட்டங்கள் விளாசினார்.

சுருண்ட பஞ்சாப்
ஹூப்ளியில் கர்நாடகா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை போட்டி நடந்து வருகிறது.

பஞ்சாப் அணி தனது முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. நேஹல் வதேரா 44 ஓட்டங்கள் எடுத்தார்.

கர்நாடகாவின் வாசுகி கௌசிக் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனைத் தொடர்ந்து கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

கேப்டன் மயங்க் அகர்வால் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சமர்த் 38 ஓட்டங்களிலும், நிகின் ஜோஷ் 8 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

193 ஓட்டங்கள்
எனினும் தேவ்தட் படிக்கல் மற்றும் மனிஷ் பாண்டே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக படிக்கல் அதிரடியில் மிரட்டினார்.

150 ஓட்டங்களை கடந்த அவர், இரட்டை சதத்தினை நோக்கி சென்றபோது ஆட்டமிழந்தார். மொத்தம் 216 பந்துகளை எதிர்கொண்ட படிக்கல் 4 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 193 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து சதம் அடித்த மனிஷ் பாண்டே 118 ஓட்டங்களிலும், ஸ்ரீனிவாஸ் 76 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 514 ஓட்டங்கள் குவித்த நிலையில் கர்நாடகா அணி டிக்ளேர் செய்தது. தற்போது பஞ்சாப் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.

 

SHARE