ஒரே ஒரு வாட்ஸ்அப் செய்தி அதிரடியாக குவிந்த 100 பொலிஸார்

241

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

ஜேர்மனியில் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரே ஒரு குறுந்தகவலை முறியடிக்க 100 பொலிஸார் அதிரடியாக குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் மூனிச் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொண்டாட்ட பிரியரான 18 வயது இளைஞர் ஒருவர் தனது வாட்ஸ் அப் நண்பர்களை அனைவரையும் அழைத்து பெரு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

விருந்து துவங்கிய சில மணி நேரங்களிலேயே கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. மட்டுமின்றி விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூச்சலால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சில பொலிஸார் அடங்கிய குழு ஒன்று சம்பவ பகுதிக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த துவங்கியுள்ளது. ஆனால் பொலிஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விருந்து நடந்த கட்டிடத்தின் முகப்பில் மட்டும் சுமார் 150 பேர் நின்றிருந்தனர்.

அவர்களை பொலிசார் அங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அதில் சிலர் பொலிஸாரின் வாகனத்தின் மீதேறினர். இரண்டு இளைஞர்கள் இதனிடையே கூட்டத்தின் மீது முட்டையை வீசத்துவங்கியுள்ளணார்.

அவர்களை உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்திய பொலிஸார் கூட்டத்தை கலைக்கும் மட்டும் அவர்களை கைது செய்து வைத்திருந்தனர்.

இதனிடையே பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிப்பு தெரிவித்த கும்பல் ஒன்று தெருவுக்கு வந்து வாகனங்களை மறித்து போராட்டத்தில் இறங்கியது. இது அடுத்த தெருவுக்கும் பரவியதை அடுத்து மேலும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு குறிப்பிட்ட விருந்து நிக்ழச்சியை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துக்கு அழைப்பு விடுத்த நபர் மீது இதுவரை பொலிஸார் வழக்கு எதுவும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE