முதல் முதலாக பிரகீத் எக்னெலிகொட 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி கடத்தப்பட்டார்.
அதன் பின்னர் அவர் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டார், அப்படி என்றால் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதியாகும்.
எக்னெலிகொட விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகின, அவர் விடுதலைப் புலிகளுடன் ஊடகவியலாளர் என்ற வகையில் தகவல் சேகரிப்பதற்காக தொடர்பு வைத்திருந்தாரே தவிர குற்றவியல் நடவடிக்கைகளில் ஆதரவு வழங்குவதற்காக அல்ல என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்கெனலிகொட அரசியல் காரணமாகவே கடத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட கடித்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை குறித்து அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் ஊடகம் ஒன்று வினவியதற்கு பதிலளித்த அவர்,
தற்போது வரையில் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரவினால் மேற்கொள்கின்ற விசாரணை நடவடிக்கை தொடர்பில் தான் திருப்தியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியினுள் அவரது அழுத்தங்களின் காரணமாக தனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இச் சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் சந்தியா என்னெலிகொட தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து இவ் விசாரணை நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுகின்றதனை தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இவ் விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதியில் இருந்து இதுவரையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கை தொடர்பில் தான் திருப்தியடைவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.