ஒரே நாளில் அஜித், விஜய், சூர்யா படங்கள்? ரேஸ் பிகின்ஸ்

283

அஜித், விஜய், சூர்யா என இன்று மூவரும் மூன்று விதமான பாதையில் சினிமாவில் பயணிப்பவர்கள். அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் வந்துவிட்டது. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக இப்போதே அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஏற்கனவே முருகதாஸ் உடன் விஜய் நடிக்கும் விஜய் 62, செல்வராகவனுடன் சூர்யா என நடிக்கும் படங்கள் தீபாவளிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் தீபாவளி டார்கெட் வந்துள்ளது பலருக்கும் சற்று அதிர்ச்சியே.

இது எப்படி, மூன்றும் ஒரே நாளில் சாத்தியமா, சினிமா மார்க்கெட் என்னாகும், தியேட்டர் கிடைக்குமா என இப்போதே சமூக வலைதளங்களில் விவாதம் சூடு பறக்க தொடங்கியுள்ளது. பொறுத்திருந்த பார்போம் யார் மற்றவர்களுக்கு வழிவிடுகிறார்கள் என்று.

SHARE