ஒரே நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்த – ரணில்!

220

625.256.560.350.160.300.053.800.461.160.90

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார்.

இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அதிகாலை மலேசியா நோக்கி சென்றுள்ளார்.

இன்று அதிகால 1.10 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட 6 பேர் கொண்ட குழுவொன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் மலேசியா நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்தே மற்றும் ஜோஸ்டன் பெர்னாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE