
சமந்தா, ராஷ்மிகா
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

நடிகை சமந்தா அடுத்ததாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க உள்ளார். பின்னர் கேம் ஓவர் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் சமந்தா பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.