நடாலி சுலைமான் ஒரு பார்ன் ஸ்டாராகவும், பிகினி போட்டோஷூட்களில் கலந்துக் கொள்பவராகவும், பப் மற்றும் பார்டிகளில் ஸ்ட்ரிப்பராகவும் பணியாற்றியவர். கடந்த 2009-ம் ஆண்டு இவருக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்றார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பார்கள், நடாலி சுலைமானுக்கு அதற்கும் மேல், ஒரே பிரசவத்தில் எட்டுக் குழந்தைகள், மருத்துவர்கள் உயிருக்கே ஆபாத்தாகும் என ஆரம்பத்தில் கரு கலைக்க கூட கூறினார்கள். ஆனால், நடாலி சுலைமான் அனைத்து சிரமங்களையும் தாண்டி வெற்றிகரமாக எட்டுக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்…
நட்யா!
நடாலி சுலைமான் பார்ன் ஸ்டாராக இருந்த போது நட்யா எனும் பெயருடன் திகழ்ந்தார். தான் ஒரு பார்ன் ஸ்டாராகவும், ஸ்ட்ரிப்பராகவும் பணியாற்றியது மனிதத்தன்மையற்றதாகவும், அதை எண்ணி வெட்கப்படுவதாகவும் நடாலி சுலைமான் கூறுகிறார்.
ஸானக்ஸ் ட்ரக்ஸ்!
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்துக் கொள்வதற்காக ஸானக்ஸ் ட்ரக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் நடாலி சுலைமான். ஏறத்தாழ தனது 41வது வயதில் (2013) அளவுக்கு அதிகமாக ட்ரக்ஸ் எடுத்துக் கொண்டதால் இறந்தே விடுவோம் என எண்ணினார் நடாலி சுலைமான்.
குழந்தைகளால் மறுவாழ்வு!
தனது ஆக்டூபிளட்ஸ் (ஒரே பிரசவத்தில் எட்டு பிள்ளைகள்) குழந்தைகளால் வாழ்க்கை திசை திரும்பியுள்ளது எனவும். இவர்கள் எட்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, வெற்றிக்கு உதவி ஊக்கமளித்து வாழ்கிறார்கள் என்றும் நடாலி சுலைமான் கூறுகிறார்.
6 ஆண் ; 2 பெண்!
நடாலி சுலைமானின் ஆக்டூபிளட்ஸ்-ல் 6 ஆண் மகன்கள், மற்றும் 2 பெண் மகள்கள் ஆவர்கள். இவர்களது பெயர் ஜோனாஹ், நரியாஹ், ஜோசியாஹ், மலியாஹ், இசையாஹ், நோஹ், ஜெரேமியாஹ், மற்றும் மகாய். ஆக்டூபிளட்ஸ்-யும் சேர்த்து நடாலி சுலைமானுக்கு மொத்தம் 16 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் அவசியம்…
குழந்தைகளை வளர்க்க பணம் தேவை என்பதால் பார்ன் படங்கள், பிகினி போட்டோஷூட் போன்றவற்றில் இவர் ஈடுபட ஆரம்பித்தார். இவர் நான்கு முறை அடல்ட் வீடியோ நெட்வொர்க் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் அசிங்கம்…
பார்ன், போதை என என் வாழ்க்கை திசை மாறி சென்றது. இப்பது எல்லாவற்றையும் விட்டு வெளியேறலாம் என்றாலும் முடித்துக் கொடுக்க வேண்டிய சில ஷூட்களை முடிக்காவிட்டால் $30,000 வரை அபராதம் செலுத்த வேண்டும். என்னிடம் $30 கூட இல்லை. எனவே, ஷூட்டை முடித்துக் கொடுத்து விட்டு தான் வர வேண்டும் என்கிறார் நடாலி சுலைமான்.