ஒரே வெடிகுண்டில் சாம்பல் ஆக்கி விடுவோம்: அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா

290
புதிதாக தயாரித்துள்ள வெடிகுண்டு மூலம் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரை சில வினாடிகளில் சாம்பல் ஆக்கி விடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்ற மேற்கொண்டு வருகிறது.இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென் கொரிய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத்தின் செய்தி ஊடகமான டிபிஆர்கே விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது, வட கொரியா தயாரித்துள்ள ஹைட்ரோஜன் வெடிகுண்டு சோவியத் யூனியன் தயாரித்த வெடிகுண்டை விட ஆற்றல் வாய்ந்தது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் இந்த வெடிக்குண்டு பொருத்தப்பட்டு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரில் விழச்செய்தால் சில வினாடிகளில் அந்த நகரமே சாம்பல் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளது.

பொருளாதார தடை விதிக்கப்பட்டும் அந்நாட்டு தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பல்வேறு நாடுகளுக்கும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வடகொரியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா, வீன் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும்படியும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE