ஒற்றை இயந்திர விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய இளைஞர்.

203

ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகம் முழுவதும் தனியாக வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞரான Lachlan Smart இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

விமான போக்குவரத்து மூலம் இவ்வாறு பயணித்தது இந்த இளைஞனுக்கு இதுவே முதல் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை இயந்திர விமானம் மூலம் 18 வயதான Lachlan Smart என்பவர் கடந்த ஜூலை 4 ம் திகதி அவரது பயணத்தை அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

இவர் ஏழு வாரங்களாக 24 ஆயிரம் மைல்கள் உட்பட 5 கண்டங்களில் உள்ள 20 நாடுகளை கடந்து வருகை தந்துள்ளார்.

ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகை வலம் வர முயன்ற முதல் அவுஸ்திரேலிய இளம் சிறுவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, Ryan Campbell(19) என்பவரே உலகை வலம் வர முதலில் முயற்சி செய்த அவுஸ்திரேலிய பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ryan Campbell தனது பயணத்தை 2013ம் ஆண்டு 7 மாதங்கள் மற்றும் 25 நாட்களில் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lachlan Smart அவரது சாகசத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

உலக சாதனையை பெறுவதற்காக முயற்சித்த இளம் இளைஞனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Bryce Hutchesson கூறியுள்ளார்.

அத்துடன் இது உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சிறந்த எடுத்துக் காட்டாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்கான எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். அதுவரையில் இலங்கை பெரிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பல்களை வழங்கும் என தாம் நம்புவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Bryce Hutchesson குறிப்பிட்டுள்ளார்.

SHARE