ஒற்றை தலைவலி தீவிரமாகும் போது, குமட்டல், வாந்தி, கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வுகள் அதிகரிப்பதுடன், கண் பார்வை மங்கலாகும்.
எனவே இந்த பிரச்சனைக்கு அவ்வளவு எளிதில் சிகிச்சையின் மூலம் தீர்வு காண முடியாது. ஆனால் இந்த ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபட ஒரு எளிய வழி உள்ளது.
தேவையான பொருட்கள்
- இமாலய கல் உப்பு – 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை – பாதியளவு
செய்முறை
முதலில் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அதனுடன் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இதை ஒற்றை தலைவலி பிரச்சனை இருக்கும் போது குடித்தால், சில நிமிடங்களிலே நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நன்மைகள்
- இமாலய கல் உப்பை பயன்படுத்துவதால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது.
- எலுமிச்சை பழமானது ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபட உதவுவதுடன், உடலை சுத்தமாக்கவும் உதவுகிறது.
குறிப்பு
ஒற்றை தலைவலி பிரச்சனையை வராமல் தடுக்க, நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதுடன், இரவில் நன்றாக உறங்க வேண்டும்.