நம்பர் 1 வீரரான ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜெனிரோ நகரில் கோலாகலமாக ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டெல்போட்ரோ என்ற அர்ஜென்டினா வீரரை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்ட நிலையில் திடீரென்று ஆட்டம் டெல்போட்ரோ பக்கம் திரும்பியது.
இதில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு டெல்போட்ரோ 7-6 (7-4) 7-6 (7-2) என்ற புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்த ஜோகோவிச் வாழ்நாளில் தான் சந்தித்த கடுமையான தோல்விகளில் இதுவும் ஒன்று என கண்ணீர் மல்க கூறி ஏமாற்றத்துடன் களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும் ஜோகோவிச்சை தோற்கடித்த டெல்போட்ரோ இன்று நடைபெறும் 2ம் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வீரர் ஜோவாவை எதிர்த்து களமிறங்குகிறார்.