ஒலிம்பிக் நாயகியின் அதிரடி முடிவு! ஏன் அப்படி செய்கிறார்?

226

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாக்கர், தான் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதேபோல் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாக்கர் 4வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் அவரின் விடா முயற்சியை ரசிகர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில் ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் சாமுண்டேஷ்வரநாத், இவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார்.

இந்த கார்களை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கையால் அவர்களுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் தான் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை தீபா கர்மாக்கர் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சொந்த ஊரான அகர்த்தலா போன்ற சிறிய நகரில் இந்த காரை ஓட்டுவதும், அதை முறையாக பராமரிப்பதும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் அவர் காரை திரும்பி வழங்க உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.

SHARE