ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது:-

235

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு வெகு கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளினதும் குழுக்களுக்கு, அந்தந்தநாடுகளின் தலைசிறந்த வீரர்கள் தலை தாங்குகின்றனர்.
பார்ப்போரின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக அகதிகள் குழுவொன்றும் அணி வகுப்பில் இணைந்து கொண்டு போட்டியில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் – றியொ டி ஜெனேரோ நகரில் நடைபெறவுள்ளது.

இதற்காக அங்கு விசேட ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல், இந்த மாதம் 21ம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மொத்தமாக 206 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் பங்கேற்கின்றன.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் கொசோவோ மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளும் முதன்முறையாக பங்கேற்றிகின்றமை விசேட அம்சமாகும்.

இந்த 206 குழுக்களில் இருந்து மொத்தமாக 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான வீர வீராங்கணைகள் பங்கேற்றவுள்ளனர்.

28 ஒலிம்பிக் போட்டிகளில், 306 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தமுறை ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பாவனைக் குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ரஷ்யாவைச் சேர்ந்த 250க்கும் அதிகமான விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.

SHARE