இந்தியாவின் ஒலிம்பிக் மங்கை சிந்து பிரபல தனியார் வங்கி மூலம் மெகா டீல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிந்து பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதனால் இவருக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு, முக்கிய பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு பரிசுகளும் குவிந்தன. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் அவரின் நிலைமை தற்போது எங்கோ சென்றுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் பிரபல தனியார் வங்கி நிறுவனமான Bank Of Baroada அவரிடம் 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்நிறுவனம் சிந்து அணிந்திருக்கும் டீ சர்டின் மத்தியில் வங்கியின் பெயர் இடம் பெற்றிருக்க சுமார் 8 கோடி ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் இந்நிறுவனம் இந்திய அணியின் முன்னாள் தலைவரான டிராவிட்டிற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன் பின் தற்போது சிந்துவை தேர்வு செய்துள்ளது.
இது மட்டுமில்லாமல் சிந்துவுக்கு தற்போது வரை 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதிலிருந்து சிந்துவுக்கு கிட்டதட்ட 50 கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.